
சிம்பு படம் ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட ‘புலி வருது’ கதை தான்.. இதோ வருது அதோ வருது என்பார்கள்.. ஆனால் சொன்ன நீரத்திற்குள் இதுவரை அவரது படங்கள் வந்ததில்லை. அதற்கு பலரும் அவரையே குற்றம் சாட்டினாலும் கூட மற்ற காரணங்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
அப்படித்தான் இயக்குனர் கௌதம் மேனன், சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கடந்த நான்கு வருடங்களாக எடுத்தார்..எடுத்தார். ஒருவழியாக இப்போதுதான் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்துள்ளார்.
இது தமிழில் மட்டும் தயாராகும் படம் என்றால் பரவாயில்லை.. ஒரே நேரத்தில் தெலுங்கில் நாக சைதன்யா நடிக்க இருமொழிப்படமாக வேறு உருவாகியிருக்கிறது.. இன்று மாலை தனது டிவிட்டரில் இந்த இரண்டு படங்களும் வரும் நவ-11ஆம் தேதி ரிலீசாகும் என உறுதியாக அறிவித்துள்ளார் கௌதம் மேனன்.
Comments are closed.