கமலுக்கு பாடல் எழுதிய பேரரசு..!

200

perarasu-kamal
இயக்குனர் பேரரசு பாடல் எழுதுவார் தான்.. ஆனாலும் இந்த காம்பினேஷன் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே என்கிற சந்தேகம் வரலாம். ஆனால் பேரரசு கமல் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு பாடல் எழுதவில்லை. கமலின் பிறந்தநாள் பாடலை எழுதியுள்ளார்.

நாளை மறுநாள் (நவ-7) கமலின் பிறந்தநாள்.. டைரக்டர் சபரி என்பவர் கமலின் அதி தீவிர ரசிகர்.. அவர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடியோ பாடலை சமர்ப்பணம் செய்ய விரும்பினாராம். அதற்கான பாடலை பேரரசுவை எழுதி தரும்படி கேட்க அவரும் ‘உனக்குள் ஒருவன், எனக்குள் ஒருவன்’ என பட்டையை கிளப்பும் பாடலை எழுதி கொடுத்துள்ளாராம்.

ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த தோர் நிஷான்லீ என்பவர்தான் இந்தப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்.

Comments are closed.