என் படத்தில் சித்தார்த், சமந்தா இல்லை” – பாலாஜி தரணீதரன் திட்டவட்டம்

155

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து, மாபெரும் வெற்றி பெற்ற ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரனுக்கு நாம் முன்னுரை தரவேண்டியதில்லை. படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் தனது அடுத்த படத்தைப் பற்றிய செய்திகளை பகிரங்கமாக அவர் அறிவிக்கவில்லை.

ஆனால் சில தினங்களாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பாலாஜியின் அடுத்த படத்தில் சித்தார்த், சமந்தா இருவரும் நடிக்கிறார்கள் என்கிற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என மறுத்திருக்கிறார் பாலாஜி தரணீதரன்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அவர், “எப்படி இப்படி ஒரு தகவல் பரவியது என்று தெரியவில்லை. நான் இப்போது தான் கதைவிவாதத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறேன். படத்தின் ஹீரோ, ஹீரோயினை முடிவு செய்ய குறைந்தது இன்னும் இரண்டு மாதமாகும்” என்கிறார் பாலாஜி தரணீதரன்.

Comments are closed.