நன்றி சொல்ல வருகிறார் சந்தானம்..! தயாராக இருங்கள் ரசிகர்களே..!

157

தான் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியில் மிரண்டுபோயிருக்கிறார் சந்தானம். ரசிகர்களின் அன்பிற்கு பதில் மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தியேட்டர்களில் படம் பார்க்கும் ரசிகர்களை நேரிலேயே சந்திக்க இன்று கிளம்பிவிட்டார் சந்தானம்.

அதன்படி இன்று வேலூர், திருவண்ணாமலையில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஓடும் தியேட்டர்களில் ரசிகர்களை சந்தானம், படத்தின் நாயகி அஸ்னா ஜாவேரி மற்றும் படக்குழுவினர் அனைவரும் சந்திக்கின்றனர். இதைத்தொடர்ந்து நாளை(15.05.14) பாண்டிச்சேரி, திருச்சியிலும் 16ஆம் தேதி மதுரை, 17ல் கோவை ஆகிய ஊர்களுக்கும் வருகை தர இருக்கிறார்கள். ஆகவே சந்தானத்தை சந்திக்க தயாராக இருங்கள் ரசிகர்களே..!

Comments are closed.