வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் சிபிராஜின் ‘சத்யா’ திரைப்படத்தின் வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஆச்சர்யம் தரும் வகையில் சிறப்பு விருந்தினராக இந்தப்படத்தின் ஒரிஜினலான ஷணம் (தெலுங்கு) படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தவிழாவில் சிபிராஜ் பேசியதாவது, “தெலுங்கில் ஷணம் படத்தில் எழுதி நடித்த ஆத்விஷேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ஷணம் படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன்.
அதேபோல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார். ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என கூறிய சிபிராஜ் விஜய் பாராட்டியதையும் குறிப்பிட தவறவில்லை.
“விஜய் அண்ணா ‘சத்யா’ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து என்னை போனில் அழைத்து பாராட்டினார். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை” என்றார் சிபிராஜ்.

Comments are closed.