விஜய் அம்மாவுக்கு ‘வி’ விருது..!

92

சாதித்தவர்கள், சாதிக்க துடிப்பவர்கள் என பல தளங்களில் இயங்கிவரும் பெண்களை மையப்படுத்தி வெளிவரும் மாத இதழ் தான் ‘We’.. இந்த இதழ் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கௌரவிக்கும் விதமாக ‘We’ அவார்டுகளை (Women Exclusive Award) வழங்கி வருகிறது.

அதேபோல இந்த 2௦14 ஆம் வருடத்திற்கான We’ அவார்டு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த கர்நாடக சங்கீத பாடகிக்கான விருது ஷோபா சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. தனது கணவரும் மகனும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பதால் தான் தனது சங்கீத பயணம் இனிமையாக செல்வதாக ஷோபா கூறினார்.

இந்த விழாவில் என்.எஸ்.கிருஷ்ணன் பேத்தியான பின்னணி பாடகி ரம்யா, உட்பட பல துறைகளை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கார்த்திக் சுப்புராஜ், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், லட்சுமிராமகிருஷ்ணன், பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Comments are closed.