அம்மு சித்தி ஆனார் அமலாபால்..!

80

தான் விரும்பிய மணாளனையே திருமணம் செய்துகொண்டு குடும்பத்தலைவி ஆன, அமலாபால் இப்போது சித்தியாகவும் புரமோஷன் ஆகியிருக்கிறார். ஆம் அவரை அம்மு சித்தி என அழைக்க ஒரு ஆண்குழந்தை இப்போது அவர்கள் வீட்டில் உதித்திருக்கிறது. அது வேறு யாருமல்ல.. அமலாபாலின் கணவரான ஏ.எல்.விஜய்யின் சகோதராரும் நடிகருமான உதயா-கீர்த்தி தம்பதியினருக்குத்தான் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

அமலாபால் இது குறித்து, “எங்கள் குடும்பத்தில் ஒரு புதுவரவு வந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்க குட்டி இளவரசனை வரவேற்கிறோம்” என ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகர் உதயாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதை எப்படியெல்லாம் சுற்றி வளைத்து செய்தியாக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்..

Comments are closed.