‘செல்பி வித் டோரா’ ; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நயன்தாரா..!

185

nayan with contest winner 3

கடந்தவாரம் நயன்தாரா நடித்த ‘டோரா’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பழைய மாடல் கார் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.. இதைவைத்து இந்த படத்தை மக்களிடம் புரமோட் பண்ணும் விதமாக’ படம் வெளியான மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டோரா கார் போன்று பல வடிவங்களில் கார்கள் வைக்கப்பட்டது..

அந்தந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்கள், அந்த காருக்கு அருகே நின்றபடி செல்பி எடுத்து படத்தை தயாரித்துள்ள ஆரா நிறுவனத்துக்கு அனுப்பினால், அவர்கள் நயன்தாராவை சந்தித்து போட்டோ எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது..

இதனால் படம் பார்க்க வந்த பலரும் இந்த செல்பி போட்டியில் பங்கேற்று தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.. போட்டியில் பங்கு பெற்றவர்களில் குழுக்கள் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து நயன்தாராவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர் படக்குழுவினர்..

செல்பி எடுத்து அனுப்பி வெற்றிபெற்று தன்னை சந்திக்க அனைவரிடமும் இயல்பாக பேசிப்பழகிய நன்யந்தாரா அவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, அவர்களுடன் செல்பி எடுத்தும் அவர்களை மகிழ்வித்தார்.

Comments are closed.