சத்யம் சினிமாஸின் லேட்டஸ்ட் சாதனை..!

211

premam- poster
தமிழில் வெளியான சூப்பர்ஹிட் படங்களே 50 நாளை தாண்டி ஓட தலையால் தண்ணி குடிக்கின்ற இன்றைய சூழலில் கடந்த மேமாதம் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம், சென்னை சத்யம் தியேட்டரில் 200வது நாளை வெற்றிகரமாக தாண்டியுள்ளது. படத்தின் ஹீரோவாக நடித்த நிவின்பாலி, மூன்று கதாநாயகிகளான சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் நகைச்சுவைக்கு வினய்போர்ட் என பலரும் இந்தப்படத்தின் வெற்றிக்கு தூணாக நின்றனர்.

கேரளாவிலேயே ஒரு ஹிட் படம் 150வது நாளை தாண்ட முடியாத நிலையில் தமிழ்நாட்டில் ஒரு மலையாளப்படம் 200 நாட்களை தாண்டியுள்ளது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தான். இத்தனைக்கும் இந்தப்படம் வெளியான மூன்றாம் நாளே படத்தின் சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்காகியும் கூட ரசிகர்கள் படத்தின் மீது வைத்திருந்த மரியாதையால் தான் 200வது நாளை இந்தப்படத்தால் வெற்றிகரமாக தொட முடிந்திருக்கிறது.

Comments are closed.