மும்மொழிகளில் ரீமேக்காகும் ‘ஈட்டி’..!

205

eetti-movie-poster
அதர்வாவுக்கு கிட்டத்தட்ட பிரேக் கொடுப்பது போல தற்போது வெளியாகியுள்ள ‘ஈட்டி’ படம் அமைந்துவிட்டது. இந்த மழைவெள்ள பாதிப்பு நேரத்திலும் கூட வசூலில் பாதிப்பில்லாமல் லாபத்தை ஈட்டியுள்ளது. தற்போது இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் இந்தப்படத்தை இந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. ஹிந்தியில் ஷாஹித் கபூரும், தெலுங்கில் நிதினும், கன்னடத்தில் யாஷும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது. தெலுங்கில் மட்டும் மைக்கில் ராயப்பன் தயாரிக்க, தமிழில் இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு மற்ற மொழிகளிலும் இப்படத்தை இயக்கவுள்ளார் .

Comments are closed.