சூப்பர் நேச்சுரல் திரில்லர் படத்தில் சத்யராஜ்..!

208

sathyaraj

காமெடி, நையாண்டி கலந்த கேரக்டர்களில் கலக்கி வந்த சத்யராஜ் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். ஒரு எப்.எம் ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்ட சூப்பர் நேச்சுரல் திரில்லராக இந்தப்படம் உருவாகிறது.. ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஒரு குறிப்பிட்ட இரவில் நடக்கும் அசாதாரண சம்பவங்களே இந்த படத்தின் மைய கருவாகும். இந்த படத்தை ‘கள்ளப்படம்’ புகழ் வேல் இயக்கவுள்ளார்.

இது குறித்து இயக்குனர் வேல் பேசுகையில், சத்யராஜ் சார் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவுடனே எனது பாதிக்கும் மேற்பட்ட வேலை முடிந்ததாக உணர்ந்தேன். கதையில் தத்ரூபத்திற்காக ஒரு நிஜ எப்.எம். ஸ்டேஷனிலேயே இப்படத்தை படமாக்கவுள்ளோம். இந்த படத்தின் கதையும் அணுகுமுறையும், நல்ல திகில் படத்தை என்றுமே கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்கிறார்.

Comments are closed.