
ஏற்கனவே நீண்ட இடைவெளிவிடுகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் அதை போக்கும் விதமாக இந்த வருடத்தில் ‘தாரை தப்பட்டை’, வெற்றிவேல்’ என இரண்டு படங்களை கொடுத்தார் சசிகுமார்.. இரண்டுமே அவருக்கு பெரிதாக உதவி செய்யவில்லை. இந்தநிலையில் தற்போது ‘கிடாரி’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் சசிகுமார்.
பிரசாந்த் முருகன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தில் ‘வெற்றிவேல்’ பட நாயகிகளில் ஒருவரான நிகிலா விமல் மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
Comments are closed.