
பேய்ப்படங்கள் என்றால் பேய்கள் மனிதர்களை பயமுறுத்தி அலறியடித்து ஓடவைப்பதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. கிளைமாக்ஸில் எப்படியோ ஒரு வழியாக பேயை விரட்டுவார்கள்., ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பேய்களை மனிதன் மிரள வைத்தால் எப்படி இருக்கும்.. செம காமெடியாக இருக்கும் இல்லையா..?
அதைத்தான் ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் சந்தானமும் செய்கிறார். பேய்ப்படங்களில் இதுவரை இல்லாத காமெடிப்படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். இவர்தான் சந்தானத்தை லொள்ளுசபா நிகழ்ச்சி மூலம் பிரபலப்படுத்தியவர். இந்தப்படம் வரும் ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாகிறது.
Comments are closed.