சண்டைக்காட்சியில் சசிகுமாரின் கை எலும்பு முறிந்தது..!

112

 

இயக்குனர் பாலா கதை அமைக்கும் பாணியை ஆர்வமாக ரசிக்கும் அதே நேரம், பாலா படங்களின் சண்டைக்காட்சிகளை மிரட்சியுடன் தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு உக்கிரமாக, தத்ரூபமாக சண்டைக்காட்சிகள் இருக்கவேண்டும் என விரும்புவார் பாலா. ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களில் தான் நாம் பார்த்திருக்கிறோமே.

தற்போது சசிகுமாரை கதாநாயகனாக வைத்து பாலா இயக்கிவரும் ‘தாரை தப்பட்டை’ படத்திலும் இப்படிப்பட்ட சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன. கடந்த ஒரு வாரமாக சசிகுமார் வில்லனுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. நேற்று படமாக்கப்பட்ட ஆக்ரோஷமான, அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின் போது சசிகுமார் சற்றும் எதிர்பாரா வண்ணம் விபத்துக்குள்ளானார்.

இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது.  உடனடியாக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட, சசிகுமாருக்கு, அங்கு சிகிச்சைக்கு பின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டது. சிறிது காலம் ஒய்வெடுக்கும்படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். சசிக்குமார் மதுரையிலேயே ஒய்வெடுக்க, படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

Comments are closed.