‘பாம்பன்’ ; சரத்குமாரின் புதிய அவதாராம்

270

paamban

சுமார் 22 வருடங்களுக்கு முன்பு மகாபிறப்பு என்கிற படம் மூலம் இணைந்த இயக்குனர் ஏ.வெங்கடேஷும் சரத்குமாரும் இன்றுவரை நல்ல நட்பிலேயே இருக்கிறார்கள். இதுவரை நான்கு படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ள இவர்கள் இருவரும் தற்போது பாம்பன் என்கிற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார்கள்.

‘எஸ்.எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பாடல் பதிவுடன் துவங்கியது. என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இந்தப்படத்திற்கு கதை வசனம் எழுதுகிறார் என்பதாலும் படத்தின் போஸ்டரில் சரத்குமாரின் கெட்டப்பே மிரட்டலாக இருப்பதாலும் நிச்சயமாக ஒரு புதுவிதமான கதையை இவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

Comments are closed.