சந்தோஷ் நாராயணன் உதவியுடன் ‘கொடி’ பிடிக்கும் தனுஷ்..!

208

Dhanush-and-santhosh-narayanan

படம் ஹிட்டாகிறதோ இல்லையோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் பாடல்கள் எப்படியோ ரசிகர்களின் மனதில் உள்ளே நுழைந்து விடுகின்றன. அந்தவகையில் அதிர்ஷ்ட காற்று இப்போது சந்தோஷ் நாராயணன் பக்கம் மிக சீரான வேகத்தில் வீசுகிறது.. பின்னே ரஜினி, விஜய் படங்கள் என திடீரென அவர் திசை மாறுவார் என சில மதங்களுக்கு முன்பு யாராவது எதிர்பார்த்திருப்போமா என்ன..?

இப்போது தனுஷும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டார்.. ஆம் காக்கி சட்டை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் நடிக்கும் ‘கொடி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார்.. தனுஷும் அனிருத் கூட்டணியை சற்று மாற்றி பார்க்கலாமே என்கிற சேஞ்ச் ஓவருக்கு தயாரானதும் இதற்கு ஒரு காரணம்.

இந்தப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக நெகடிவ் கதாபாத்திரத்தில் த்ரிஷாவும், இன்னொரு கதாநாயகியாக ஷாமிலியும் நடிக்கிறார்கள்.. தனுஷின் தந்தையாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.

Comments are closed.