சாகசம் என்ற வீரச்செயல் – விமர்சனம்

220

saahasam_movie
மிடில் கிளாஸ் இளைஞர் பிரசாந்த்.. ஏதேச்சையாக வழியில் குறுக்கிடும் கடத்தல்காரன் சோனு சூட்டை போலீசில் சிக்கவைப்பதுடன் அவரது தம்பியன் சாவுக்கும் காரணமாகிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் சோனு சூட் பிரசாந்தை பழிவாங்க துடிக்க, தான் இறந்துவிட்டதாக நாடகாமாடி, போலீஸாரின் ஆலோசனைப்படி கோவைக்கு செல்கிறார் பிரசாந்த்..

அங்கே போலீஸ் கமிஷனர் தம்பி ராமையாவின் வீட்டில் இருந்துகொண்டே, அந்த ஊர் பெண்ணான அமெண்டாவை காதலிக்கிறார். கோவையில் இருந்து வெளிநாடு தப்பிக்க முயற்சி செய்யும் சோனு சூட், கோவையில் பிரசாந்த் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார். இதை தொடர்ந்து பிரசாந்துக்கும் சோனு சூட்டுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டமும் வெற்றி யாருக்கு என்பதும் தான் மீதிக்கதை.

பிரசாந்த் இன்னும் அதே துடிப்புடன் நிமிடத்துக்கு நிமிடம் சாகசம் செய்து நமது பல்ஸ் ரெட்டை எகிற வைக்கிறார்… உள்ளூரில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா..? இல்லை பிரசாந்துடன் நடிக்க கதாநாயகிகள் மறுத்துவிட்டார்களா தெரியவில்லை.. அமெண்டா என்கிற ஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்துவந்து கதாநாயகியாக்கி படுத்தி எடுக்கிறார்கள்..

சோனு சாட் வழக்கம்போல ஹைடெக் வில்லன். அவருடன் வரும் ஊமைப்பெண் கதாபாத்திரம் நம்மை கவர்கிறது. நாசர், கோட்டா சீனிவாசராவ் வந்து போகிறார்கள் அவ்வளவுதான். தம்பி ராமையாவும், எம்.எஸ்.பாஸ்கரும் தங்களது வித்தியாசமான (!) நகைச்சுவையால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள். பிரசாந்தின் படத்தில் எப்போதும் பாடல்கள் பிளஸ் ஆக அமையும். இதிலும் தேசி கேர்ள், சாயாங்கோ என சிலவற்றில் பளிச்சிடுகிறார் இசையமைப்பாளர் தமன்.. ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்குத்தான் கார் சேசிங், ஹெலிஹாப்டர் சேசிங் என பெண்டு நிமிர்ந்திருக்கும் என்பது காட்சிக்கு காட்சி நன்றாக தெரிகிறது.

ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையும் அது தொடர்பான தொடர் மோதலும் என்கிற அருமையான ஒன் லைன்.. ஆனால் படம் பார்க்க செல்லும் ரசிகர்களை பத்து வருடத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு, அழைத்து செல்கிறார்கள் திரைக்கதையை உருவாக்கி இருக்கும் தியாகராஜனும் இயக்குனர் அருண்ராஜ் வர்மாவும்

ஹீரோவும் வில்லனும் புத்திசாலிகளாக இருக்கலாம்.. ஆனால் ஒருவர் போடும் திட்டத்தை, இவர் இப்படித்தான் மூவ் பண்ணுவார் என தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது அவர்களை பொறுத்தவரை புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் திரைக்கதையில் அதை புத்திசாலித்தனம் என ஒரு போதும் சொல்ல முடியாது..

டூயட் பாடல்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் கட் பண்ணிவிட்டு, பிரசாந்தின் ஓவர் கான்பிடன்ட் வசனங்களையும், போலீசுக்கு புத்தி சொல்வது, போலீசை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்களது துப்பாக்கியை வைத்து எதிரிகளை இவர் என்கவுண்டர் பண்ணுவது போன்ற ஓவர் பில்டப் காட்சிகளையும் குறைத்து அதிவிவேகமாக பயன்படுத்தி இருந்தால் இந்த சாகசம் நம்பும்படியாக இருந்திருக்கும்..

விஜய் ஐம்பதடி பறந்து போய் ரயில் பாலத்தை தாவிப்பிடிப்பதையும், ரஜினி பைக்கில் சென்றுகொண்டே மலையில் இருந்து தாவி பாராசூட் பலூனில் குதிப்பதையும் கண்டு ஜெர்க் ஆன ரசிகர்களுக்கு இந்தப்படமும் அதேவித அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

Comments are closed.