பாகுபலி’யை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரமாண்டம் காட்ட வரும் ‘சாதகர்ணி’..!

205

saadhakarni

ஆந்திர சினிமாவில் கடந்த நாற்பது வருடங்களாக தனது இருப்பை அழுத்தமாக பதியவைத்துள்ளவர் நடிகர் பாலகிருஷ்ணா. நூறு படங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவரது நூறாவது படமாக வெளியானது ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ படம்.. தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் தான் இந்தப்படத்தையும் இயக்கியிருந்தார்..

வரலாற்றில் உண்மையிலேயே வாழ்ந்த ஓர் மாபெரும் அரசனான கௌதமி புத்ர சாதகர்ணி என்பவரை பற்றிய வாழ்க்கை வரலாற்றை உலகுக்கு அறிவிக்கும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. அதுவும் வெறும் 79 நாட்களில். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘சாதகர்ணி’ என்கிற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் கிரிஷ், பாலகிருஷ்ணாவை வைத்து அவரது 102வது படத்தை இயக்கப்போகும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சீனியர் நடிகைகள் லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

Comments are closed.