‘கிருமி’ இயக்குனரை வைத்து படம் தயாரிக்க மாட்டேன்” – எஸ்.ஏ.சி சுவாரஸ்யம்..!

224

அறிமுக இயக்குனர் அனு சரண் இயக்கத்தில் கதிர், ரேஷ்மி மேனன் நடிப்பில் தயாராகியுள்ள படம் தான் ‘கிருமி’.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘கிருமி’ இயக்குனர் அனு சரணை வைத்து படம் தயாரிக்க மாட்டேன்” என ஓப்பனாக பேசினார். பின்னர் அதற்கு ஒரு சுவாரஸ்யமான விளக்கமும் கொடுத்தார்.

“இந்த படத்தின் இயக்குனர் அனு சரணை எனக்கு படம் இயக்க சொல்லி கேட்டேன் ஆனால் அவர் மறுத்தார். நிச்சயமாக படம் வெற்றி பெற்ற பின்பு அவர் என்னிடம் வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் ஏனென்றால் எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்க பிடிக்காது.. அதுதான் காரணம்” என்றார்.

மேலும், “நான் இந்த படத்தை பார்க்க வந்தபோது பாதி படத்தை தான் பார்ப்பேன் என்றேன். ஆனால் முழு படத்தை பார்த்துவிட்டு தான் சென்றேன். அதற்கு காரணம் படம் அவ்வளவு அருமையாக இருந்தது” என்று கூறினார் இயக்குனர் எஸ்.ஏ.சி

Comments are closed.