கதாபத்திரங்களுக்கு சரித்திர நாயகர்களின் பெயரை சூட்டினார் ஜனநாதன்..!

123

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது இயக்கிவரும் அவரது நான்காவது படைப்பு தான் ‘புறம்போக்கு என்னும் பொதுவுடமை’.. பெயரே புரட்சிக்கு வித்திடும் வகையில் வைத்துல்லா அவர், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு கூட சுதந்திர போரில் பங்குபெற்ற வீர மறவர்களின் பெயரைத்தான் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து, பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கு கிடைத்துள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுகப்படுத்தியவருமான மெக்கலேவின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு யமலிங்கம் என்றும் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

Comments are closed.