தமிழில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெறக்கூடிய பிரபலமான ஒளிப்பதிவாளர் தான் செழியன். ‘கல்லூரி’,’தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ போன்ற படங்களில் இவரது ஒளி வண்ணம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும்.ஆனால் ஒளிப்பதிவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த செழியனின் இன்னொரு முகம் பலரும்அறியாதது.
அவர் இசை தொடர்பாக இதுவரை 15 நூல்களை எழுதி இருக்கிறார். அதன் அடுத்த கட்டமாக தற்போது சென்னை சாலிகிராமத்தில் இசைப்பள்ளி ஒன்றையும் தொடங்கியுள்ளார்.. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. பிரபல கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் இயக்குனர் சீமான், பாலா, மிஷ்கின், பாடகர் மனோ மற்றும் ஓவியர் மருது ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர்.
சீமான் பேசும்போது “இன்றைய தமிழ்ச்சமூகம் இசையை ஒரு கல்வியாகப் பயின்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தருணத்தில், ‘ஓர் இசைப்பள்ளி தொடங்கும்போது பல மனநல மருத்துவ மனைகள்மூடப்படுகின்றன’ என்கிற கவிஞன் அறிவுமதியின் கருத்தினை நான் வழிமொழிகிறேன். இந்த இசைப் பள்ளி முயற்சியை வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த இசை பள்ளியில் மேற்கத்திய இசையுடன் நம் இசையும் கற்றுத் தரப்படுகின்றன. இந்த பள்ளியில் அனைத்து இசைக் கருவிகளையும் இசைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை நிர்வகிப்பது அவருடைய மனைவி என்றாலும் செழியனின் பங்களிப்பு பெரிதும் உள்ளது. இந்தப் பள்ளி சென்னை, சாலிகிராமம், 111, துரையரசன் தெருவில், THE MUSIC SCHOOL என்ற பெயரில் தொடங்கப் பட்டுள்ளது.
Comments are closed.