சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் நடித்துள்ள படம் ‘நீ நான் நிழல்’. இந்தப்படத்தில், சமூகத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அன்வர் அலி என்கிற மலேசியன் போலீஸ் ஆபிசராக நடித்துள்ளார் சரத்குமார். இளம் ஜோடிகளாக அர்ஜூன் லால் – இஷிதா நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மனோஜ் கே..ஜெயன்.
இந்தப்படத்தின் இயக்குனர் ஜான் ராபின்சன், இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தவர். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் சரத்குமார்.
அப்போது நிருபர் ஒருவர் உங்களுக்கு புரட்சி திலகம் பட்டம் யார் கொடுத்தது என்று கேட்டார். அதற்கு சரத்குமார், “உங்களைப்போல ஒரு பத்திரிக்கை நண்பர் தான் சூட்டினார். புரட்சித்தலைவரில் பாதியும் மக்கள் திலகத்தில் பாதியும் இணைந்து இந்த பட்டம் இருப்பதால் சுப்ரீம் ஸ்டார் என்பதைவிட இதுதான் எனக்கு பிடித்த பட்டம்” என்று கலகலப்பாக பதில் கூறினார்.
Comments are closed.