ரஜினி டயலாக்கில் உருவாகும் இன்னொரு படம்..

50

ஒரு படத்தில் ரஜினியை பார்த்து  வில்லன் நீ யார் என கேட்பார்.. அதற்கு ரஜினி, “பட்ர…லோக்கல் பட்ர’ என கெத்தாக கூறுவார். இப்போது அந்த டயலாக்கை வைத்து ‘பட்டர’ என்ற படம் உருவாகி இருக்கிறது.

நமதுஅன்றாட வாழ்வில் நாம் சந்திக்க விரும்பாத ஆனால் சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றிய கதை.

சமூகத்தின் அவலமான இரு பெரிய துருவங்களின் போர்  எப்படி அப்பாவி மக்களின் வாழ்கையை பாதிக்கிறதுஎன்பதை அறிமுக இயக்குனர் ஜெயந்தன் மிகவும் நேர்த்தியாக , துணிச்சலாக  படம் பிடித்து காட்டி உள்ளார்.  மனிதஉருவில் வலம் வரும் மிருகங்கள் இடையே வாழும் ஒரு இளைஞன் விண்வெளி துறையில் சாதிக்க விரும்புகிறான்.

அவனது எண்ணங்கள் வாழ்வில் சந்திக்கும் சில சம்பவங்களால் நொறுங்கி போகிறது. சமூகத்தின் இரு பெரிய தூண்கள் இடையே அவன் ஒரு துரும்பாக நுழைந்து, எப்படி ஒரு ஆயுத கிடங்காக மாறி அழிக்கிறான் என்பதை பரபரப்பாக சொல்லும் படம் தானாம் இந்த ‘பட்டர’..

Comments are closed.