ரசூல் பூக்குட்டியும் ஹீரோவாக மாறினார்..!

259

rasool pookkutty
ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய இன்னொரு நபர் சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் பெரும்பாலும் பணியாற்றுவது தமிழ் மற்றும் இந்திப்படங்களில் தான். தற்போது லேட்டஸ்டாக ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருகிறார்.

இந்தப்படத்திற்கு ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என தலைப்பிட்டுள்ளார்கள். பிரசாத் பிரபாகரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார்.

இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது .

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80 மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கோர் செய்யவதில் பணிபுரிந்தனர். 22 காமெராக்களை கொண்டு அந்த விழாவில் வசித்து அசத்திய 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம். கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும் படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது” என கூறியுள்ளார்..

Comments are closed.