விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே லட்சுமி மேனன் கதாநாயகியாக இருப்பதால் தனக்கு இதில் முக்கியத்துவம் இருக்குமா என முதலில் தயக்கம் காட்டியிருக்கிறார் இனியா.
ஆனால் இயக்குனர் அவரது கதாபாத்திரத்தை விளக்கியபோது மறுபேச்சில்லாமல் சம்மதித்து விட்டாராம். அதுமட்டுமல்ல, இனியாதான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் திரு விடாப்படியாக நின்று அவரை சம்மதிக்க வைத்தாராம்.
இனியா சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் ஜனவரியில் படமாக்கப்பட இருக்கின்றன. விஷால் ஃபிலிம் ஃபேக்டரியுடன் யுடிவி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.