மலையாள சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்தான் சலீம்குமார். மூன்று வருடங்களுக்கு முன்பு ‘ஆதாமிண்ட மகன் அபு’ படத்தில் ஹஜ் யாத்திரை செல்லவிரும்பும் முஸ்லீம் பெரியவராக நடித்து அனைவரையும் கணகலங்க வைத்தார். அவரது நடிப்பை பாராட்டி தேசியவிருதும் தேடிவந்தது.
ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், இன்னும் மூன்று வருடங்கள் நடித்துவிட்டு அதன்பின் சினிமாவில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன் என கூறியுள்ளார். இத்தனைக்கும் தற்போது சலீம்குமாருக்கு வயது 45தான். வாய்ப்புகளும் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. பின் ஏன திடீரென இந்த முடிவு..?
“தொடர்ந்து சினிமாவில் நடிப்பது வரவர போரடிக்க ஆரம்பித்துவிட்டது.. போதும்.. இருபது வருடங்கள் சினிமாவில் இருந்துவிட்டேன். ஒரு மகனாக, கணவனாக, குழந்தைகளுக்கு தகப்பனாக நான் செய்யவேண்டிய காரியங்கள் இன்னும் இருக்கின்றன. தவிர சினிமாவையும் தாண்டி செய்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
அதனால்தான் இந்த முடிவு.. மேலும் எல்லா துறைகளிலும் ஓய்வு பெறுவது போல சினிமாவிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓய்வுபெற்று ஒதுங்கிக்கொள்ளவேண்டும். ஆனால் யார் முன்வருவார்கள்..?” என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் சலீம்குமார்.
சலீம்குமார் விலகினால் உண்மையான சினிமா அபிமானிகளுக்கு அது ஈடுசெய்ய முடியாத இழப்புதான்.

322673 700856Hello! Nice post! Please do keep us posted when we can see a follow up! 111404
647923 964932You need to participate in a contest for among the best blogs on the internet. I will suggest this site! 548610
958083 173638It can be difficult to write about this subject. I feel you did an excellent job though! Thanks for this! 950217
760169 133470I discovered your blog site on google and verify a few of your early posts. Continue to sustain up the superb operate. I just extra up your RSS feed to my MSN News Reader. Seeking for forward to reading extra from you in a although! 360398