நிதானம் காட்டுகிறார் மோகன்லால்..! ஏன்..? எதற்கு..?

80

20 வருடங்களுக்கு முன்பே சரியாக முடிவெடுத்திருக்க வேண்டிய விஷயம்.. அப்போது தேவையில்லை என விட்டுவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.. ஆனால் இப்போது மீண்டும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலைத்தான் சொல்கிறோம்…

1996ல் ‘இருவர்’ என்ற நேரடி தமிழ் படம் மூலமாக மோகன்லாலை தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் மணிரத்னம். ஆனால் படம் வெற்றி பெறாததால், மோகன்லால் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை… அதன்பின் நாசர் டைரக்‌ஷனில் நடித்த ‘பாப்கார்ன்’ படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

ஆனால் கமலுடன் இணைந்து நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ மோகன்லாலின் கம்பீரத்தை தமிழ்ரசிகர்களுக்கு வெளிக்காட்டியது என்றால், இப்போது விஜய்யுடன் நடித்திருக்கும் ‘ஜில்லா’ அவரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

மேலும் மலையாளத்தில் அவர் நடித்த ‘த்ரிஷ்யம்’ படமும் சூப்பர் ஹிட்டாகவே, தற்போது மலையாளத்தில் நல்ல கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார் மோகன்லால். அத்துடன் வருடத்திற்கு ஒரு தமிழ்படத்திலும் நடித்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்திருக்கிறார். சம்பளம்..? அது பிரச்சனையே இல்லை.. ‘ஜில்லா’வுக்கு வாங்கிய மாதிரி நடிக்கின்ற படத்தின் கேரள வினியோக உரிமையை வாங்கிக்கொண்டு போய்க்கிட்டே இருப்பார் மோகன்லால்.

Leave A Reply

Your email address will not be published.