இயக்குனர் பா.ரஞ்சித்தின் தங்கை சுபிக்காவும், நடிகர் கலையரசனின் மனைவி ப்ரியா கலையரசனும் இணைந்து ‘கிண்டர் லா’ என்னும் மழலையர் கல்விச்சாலை ஒன்றை துவங்கி உள்ளனர். ஆர்யாவும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் இந்த மழலையர் பள்ளியை துவங்கி வைத்தனர்.
சென்னை அடையாரில் ‘கின்டர் லா’(Kinder La) ப்லே ஸ்கூல் எனப்படும் மழலையர் கல்வி சாலை. இதன் சிறப்ப்மசமே முழுக்க முழுக்க விளையாட்டை அடிப்படையாய் கொண்டு குழந்தைகளை கற்பிப்பது தான். “எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய, விளையாட்டுப்போக்கில் ஒரு கல்விச்சுழல் என இன்றைய குழந்தைகளின் புரிதலுக்கேற்ப எங்களது பாட வழிமுறைகள் அமைந்துள்ளன” என்கின்றனர் கின்டர் லா நிறுவனர்களான சுபிக்காவும் ப்ரியா கலையரசனும்.

Comments are closed.