ஹீரோக்களை டேமேஜ் பண்ணும் வைரஸ்கள்

90

ராம்சரணும் மகேஷ்பாபுவும் கிரிமினலுக்கு உதவி செய்யும் வைரஸ்கள் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருவது இயற்கைதான். பின்னே தான் உண்டு, தன் வேலை உண்டு என நடித்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றி அவதூறு சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்? ஆனால் இப்படி சொல்வது இணையதளத்தில் உள்ள McAfee எனப்படும் ஆண்டி-வைரஸ் சாஃப்ட்வேர்தான்.

சமீபத்தில் இந்த ஆண்டி-வைரஸ் சாஃப்ட்வேர் எடுத்த கணக்கெடுப்பின்படி மகேஷ்பாபு, ராம்சரண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை க்ளிக் செய்யும்போது அவை வைரஸ்களால் பாதிக்கப்படுள்ள பக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதோடு, நம் கம்ப்யூட்டரையும் முடக்கிவிடும்.

இதுபோன்ற விஷமச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் நடிகர்களின் பெயரை பயன்படுத்தித்தான் இந்தக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதில் முதல் இடத்தில் மகேஷ்பாபு இருக்கிறார். இவர் பெயரில் இயங்கும் வைரஸ் பரப்பும் வெப்சைட்டுகளின் எண்ணிக்கை மொத்தம் 45. அதற்கடுத்து ராம்சரண் 2வது இடத்திலும் தொடர்ந்து பவன் கல்யாண், அஞ்சலி, இலியானா, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் உள்ளனர். இணையதளத்தை உபயோகப்படுத்துவோர் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

Leave A Reply

Your email address will not be published.