நான்காவது முறையாக ராம்சரணுடன் இணையும் காஜல் அகர்வால்..!

233

இன்றைய தேதியில் ஒரு ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் இரண்டு படங்களில் தொடர்ந்தாலே அது அதிசயம் தான்… ஆனால் ராம்சரண் – காஜல் அகர்வால் ஜோடி இப்போது ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கிற்காக நான்காவது முறையாக இணைய இருக்கிறது. படத்தை சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்குகிறார்.

ராம்சரணும் காஜல் அகர்வாலும் ராஜமௌலி டைரக்‌ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆனதால் தொடர்ந்து ‘நாயக்’, ‘கோவிந்தடு அந்தரிவாடுலே’ என அடுத்தடுத்து தொடந்து ஹிட் கொடுத்து வந்தனர்.. ராசியான ஜோடி என்பதால் இப்போது நான்காவது முறையும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

Comments are closed.