தமிழிலும் ஒரேநாளில் மோதும் ராம்சரண் – அல்லு அர்ஜுன்..!

224

தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர் தான் அல்லு அர்ஜூன். மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில் அல்லு அர்ஜூனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உணடு. இவரை பார்த்துதான் இவருக்கு பின் இவரது மச்சான் ராம்சரண் தேஜா நடிக்க வந்தார்.. தற்போது இருவருமே முன்னணியில் உள்ள இளம் போட்டி நடிகர்கள் தான்..

இப்போது ஆச்சர்யமான விஷயமாக வரும் வெள்ளிக்கிழமை அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’யும் ராம்சரண் நடித்துள்ள புரூஸ்லியும் தமிழில் ஒரே நாளில் வெளியாகின்றன. ராம் சரண் படம் தெலுங்கிலும் வெள்ளியன்று தான் வெளியாகிறது. ஆனால் ருத்ரமாதேவி கடந்த வெள்ளிக்கிழமையே தெலுங்கில் ரிலீசாகிவிட்டது. சரித்திரப்படம் என்றாலும் ஆனால் பாகுபலி அளவுக்கு ருத்ரமாதேவிக்கு வரவேற்பு கிட்டவில்லை என்றே சொல்லப்படுகிறது.

Comments are closed.