அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘காலா’ டீசர்..!

298

kaala teaser release hype

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் டைரக்சனில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த டீசரை சரியாக 24 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

நெருப்புடா நெருங்குடா பாடல், அதன் பின்னணி இசை என இசையால் அசத்திய கபாலி பட டீசர் போல இது கேட்கும்போது அதிர்வலைகளை ஏற்படுத்த தவறினாலும், டீசரில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக மூட்டுவதாகவே அமைந்துள்ளன.

குறிப்பாக வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன்.. தில் இருந்தா மொத்தமா வாங்கலே” என ரஜினி நெல்லை பாஷையில் பேசும் வசனம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. அதேசமயம் அவரது அரசியல் பிரவேசத்தையும், அவர் தனியாகவே அரசியலில் தன்னை எதிர்ப்பவர்களுடன் மோத துணிந்துவிட்டதையும் மீண்டும் அழுத்தமாக பறைசாற்றுகிறது.

இந்த வசனம் அரசியல் அரங்கில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு விவாதப்பொருளாக மாறி சில நாட்கள் மீடியாக்களில் அனல் கிளப்ப வைக்கும் என்பதும் நன்றாக தெரிகிறது.

Comments are closed.