பேரன் பெயரில் ஸ்டைல் மன்னன் தூள்பறத்தும் ‘லிங்கா’..!

241

இப்படித்தான் இருக்கவேண்டும்.. அதுதான் தலைவரின் பாலிசியும் கூட… படம் ஆரம்பிப்பதாக அறிவிக்கும்போதே படத்தின் பெயரையும் அறிவித்து விடுவது.. இப்போதைய ட்ரெண்ட் போல, ஆளுக்கொரு பெயராக யூகம் செய்ய சான்ஸே தரமாட்டார் ரஜினி.

அதே பாலிசியில்தான் தனது அடுத்த படத்திற்கு ‘லிங்கா’ என ஒரு வைப்ரேஷன் உள்ள பெயரை சூட்டியுள்ளார். இது அவரது பேரனின் (தனுஷ்-ஐஸ்வர்யா மகன்) பெயர் என்பது கூடுதல் சிறப்பு. அதே சூட்டோடு வரும் 19ஆம் தேதி தனது ஆஸ்தான் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில் படப்பிடிப்பை துவங்கவும் இருக்கிறார். ‘படையப்பா’வுக்குப்பின் கிட்டத்தட்ட 15 வருட இடைவெளிவிட்டு ரஜினி படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிகுமார்

ரஜினியின் ஹாட் ஸ்வீட் ஜோடிகளாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா. படத்தின் கதை 19ஆம் நூற்றாண்டில் நிகழும் வரலாற்று கதை என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது.. இன்னொரு பக்கம் ‘சந்திரமுகி’ மாதிரி த்ரில்லர் என்கிறது நெருங்கிய வட்டாரம். அதற்கேற்றமாதிரி படத்தின் கதையை எழுதியிருகிறவர் யாரென்று பார்த்தால், த்ரில்லரான ‘சாருலதா’வை இயக்கிய பொன்குமரன். சரிதான்.. இனி சொல்லவா வேண்டும்.

Comments are closed.