ரஜினி வாய்ஸ் கொடுக்கப்போகிறார் என்ற செய்தி வெளியானாலே பரபரப்புதான்.. காரணம் அரசியல் அரங்கில் அவர் வாய்ஸின் வலிமை அப்படி.. ஆனால் இந்த முறை ரஜினியின் வாய்ஸ் ஒலிக்கப்போவது ரயில்வே ஸ்டேஷன்களில்.. ஆனால் வாய்ஸ் கொடுப்பது சூப்பர்ஸ்டார் அல்ல.
ஆம்.. ரஜினியின் குரலில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர்தான் குரல் கொடுக்கிறார். இது ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு எச்சரிக்கை நிமித்தமாக கொடுக்கப்படும் வாய்ஸ்.. விரைவில் பதிவு செய்யப்பட ரஜினியின் குரல் ரயில்வே ஸ்டேஷன்களில் ஒலிக்க ஆரம்பிக்கும். இனிவரும் ரயில் பயணங்கள் ரஜினியின் குரலுடன் உற்சாகமாக தொடங்கும்.
Comments are closed.