கேரளாவுக்கு இடம்பெயர்கிறது பாபநாசம்..!

77

 

திருநெல்வேலி பகுதியில் விறுவிறுப்பாக நடந்துவந்த ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு கமலின் உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கேரளாவுக்குள் நுழைய இருக்கிறது ‘பாபநாசம்’ டீம்.

இயற்கை அழகுக்கு பெயர்போன தொடுபுழாவில் தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப்படத்தின் ஒரிஜினலான மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்தில் இடம்பெற்ற மோகன்லாலின் வீட்டையே பாபநாசம் படத்தில் கமலின் வீடாக மாற்றி படம் பிடிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டு பீல் வரவேண்டும் என்பதற்காக இந்த வீட்டில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறார்களாம்.

Comments are closed.