இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஃப்ரெஞ்ச் பட இயக்குனர் க்ளாட் லிலவுச்சை கவர்ந்த இந்திய இயக்குனர் யார் தெரியுமா..? சந்தேகமே இல்லாமல் நம்ம தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி தான். பின்னே 50 படங்கள் இயக்கியுள்ள க்ளாட் லிலவுச் சில தினங்களுக்கு முன் இந்தியா வந்தபோது நேரே போய் இறங்கிய இடம் தற்போது ராஜமௌலி இயக்கிவரும் ‘பாஹூபாலி(தமிழில் ‘மஹாபலி’) படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான்.
அங்கே ராஜமௌலி காட்சிகளை படமாக்கும் விதத்தை ஆச்சர்யத்துடன் பார்த்த க்ளாட் லிலவுச் அவரைப் பாராட்டியும் இருக்கிறார். மேலும் ராஜமௌலியும் க்ளாட் லிலவுச்சிடம் சில தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டாராம். அவர் ராஜமௌலியை தேடிவர காரணம் ‘மகதீரா’வும் ‘ஈகா’வும்(நான் ஈ) அவரை ரொம்பவே கவர்ந்துவிட்டதுதானாம்.