எஸ்.பி.ஜனநாதன் இயக்கவுள்ள் ‘புறம்போக்கு’ திரைப்படத்தின் ஸ்பெஷல் விளம்பரத்துக்கான புகைப்படங்கள் வெளியான நாள் முதல் படத்தின் மேல் உள்ள ஆர்வம் கூடி கொண்டு இருக்கிறது. அதே மாதிரி ஆர்யா-விஜய் சேதுபதி கூட்டணியும் இதுவரை கண்டிராத ஒரு புதுவிதமாக இருக்கும். இந்த புகைப்படங்களில் மிகவும் முக்கியமானதே நாயகர்கள் இருவரும் அணிந்திருக்கும் சட்டையின் நிறம்தான்.
ஆர்யாவின் சிவப்பு நிற சட்டையும், விஜய் சேதுபதி அணிந்து உள்ள கருப்பு நிற சட்டையும் படத்தின் ‘நிறத்தை’த்தான் வெளிக்காட்டுகிறதாம். இயக்குனர் ஜனநாதனின் படங்களில் ‘பொது’வாக காணப்படும் கதை அமைப்பும், காட்சி அமைப்பும் இந்த பரபரப்பை போகப்போக அதிகமாக்கும் என்றே தெரிகிறது.
ஜனவரியில் முதற்கட்ட படபடிப்பை குலுமணாலியில் தொடங்கி அப்படியே பீகானிர், ஜெய்ப்பூர், பொக்ரான் வழியாக ஜெய்சல்மர் வரை போய் படமாக்க திட்டமிட்டுள்ளார் ஜனநாதன்.