
ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் என மூன்று முன்னனி நட்சத்திரங்களை வைத்து சீரான வேகத்தில் ‘புறம்போக்கு பொதுவுடமை’ படத்தை இயக்கி வருகிறார் எஸ்.பி.ஜனநாதன்.. பின்னி மில்லில் போடப்பட்டுள்ள பிரமாண்டமான சிறைச்சாலை செட்டில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதனால் வரும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸை நடத்திவிட திட்டுமிட்டுள்ளார் படத்தை தயாரித்துவரும் யுடிவி தனஞ்செயன். அதுமட்டுமல்ல பொங்கல் பண்டிகை விருந்தாக படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.
அனேகமாக அது பொங்கல் பண்டிகையாக இல்லாவிட்டாலும் கூட மற்ற படங்களுடன் போட்டியிடாத வகையில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் விதமாக வேறொரு நாளில் கூட மிக பிரமாண்டமான முறையில் ரிலீஸ் செய்யவும் திட்டம் வைத்துள்ளதாம் யுடிவி நிறுவனம்.
Comments are closed.