வேதாளமாக மாற தயாராகும் புனீத் ராஜ்குமார்..!

224

puneeth as vethaalam

பொதுவாக கன்னட முன்னணி நடிகர்கள் மற்ற மொழிகளில் இருந்து வெற்றிபெறும் கதைகளை ரீமேக் செய்து நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.. நல்லதோ, கெட்டதோ சொந்த ஊர் சரக்கே போதும் என நினைப்பார்கள்.. ஆனால் தனக்கேற்ற தோதான கதை கிடைத்ததால் நடிகர் புனீத் ராஜ்குமரால் அப்படி இருக்க முடியவில்லை..

அவரை கவர்ந்த அந்த கதை அஜித்தின் வேதாளம் தான். அதனால் வேதாளத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகவும் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.. கடந்த வருடம் இங்கே வெளியான வேதாளம் கிட்டத்தட்ட அறுபது கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல கன்னடத்திலும் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கலாம்.

Comments are closed.