
‘ஈட்டி’ படத்தில் ஒருதடகள வீரனுக்கே உரிய புஜபல பராக்கிரமங்களுடன் காணப்பட்டார் அதர்வா. வில்லன்களுடன் மோதும்போதும் அந்த முறுக்கேறிய உடம்பு நன்றாகவே ஒத்துழைத்து.. ஆனால் தற்போது அவர் நடித்துள்ள ‘கணிதன்’ படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு உடம்போ, சண்டிவீரன் போல அரிவாளோ தேவைப்படவில்லை.
அறிவு… எஸ்.. அதைவைத்து தான் இந்தப்படத்தில் எதிரியுடன் மோதுகிறார் அதர்வா.. காரணம் இந்தப்படத்தின் கதையே ஒரு அறிவாளிக்கும், அவனை விட மிக புத்திசாலியான இன்னொருவானுக்கும் அறிவுப்பூர்வமாக நடக்கும் வில்லத்தனம் கலந்த மோதல் தான்..
அதனால் அதர்வாவுக்கு சரியான டப் கொடுக்கும் வில்லனாக பாலிவுட்டில் இருந்து தருண் அரோரா என்பவரை களம் இறக்கியுள்ளார்கள். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தை டி.என்.சந்தோஷ் என்பவர் இயக்குகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார்.
Comments are closed.