ஒவ்வொரு இயக்குனரும் தங்களது கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என தாங்கள் நீண்ட நாட்களாக மனதில் நினைத்து வைத்திருந்த பெயரைத்தான் வைப்பார்கள். ஆனால் அதுவே குறிப்பிட்ட ஒரு தரப்பினரை புண்படுத்துவதாக இருந்துவிட்டால் சிக்கல் தான்.
அப்படி ஒரு சிக்கலைத்தான் ரஞ்சித் போஸ் இயக்கிய ‘மடிசார் மாமி’ படமும் சந்தித்துள்ளது. இந்தப்படத்தின் டைட்டில் தங்களை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக ஒரு தரப்பினர் வழக்கு தொடர அதனாலேயே இந்தப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.
நீதிமன்றமும் படத்தின் பெயரை மாற்றினால் படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிவிட தற்போது படத்தின் தலைப்பை ‘புளிப்பு இனிப்பு’என மாற்றியுள்ளனர். மிதுன், மான்சி இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை சுஷாந்த் என்பவர் தயாரித்துள்ளார்.
Comments are closed.