பீட்டர் ஹெய்னுக்கு இயக்குனர் சங்கம் ‘தடா’…!

135

இனிமேல் ஹைதராபாத்தில் சண்டைக்காட்சிகளை படமாக்குவதை தவிர்த்து விடுங்கள் என்று இயக்குனர் சங்கத்தலைவரான விக்ரமன் இயக்குனர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். குறிப்பாக ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் வேண்டவே வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னை ஒப்பந்தம் செய்வதையும் தவிருங்கள் என இன்னொரு செய்தியையும் அனுப்பியுள்ளார். திறமையான ஸ்டண்ட் மாஸ்டர் தான் பீட்டர் ஹெய்ன்.. ஷங்கரின் படங்களுக்கெல்லாம் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் இவர்தான்.

ஆனால் ஃபெஃப்ஸி தொழிலாளர்களுக்கும் அவருக்கும் இடையே கொஞ்ச நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால் இது தொடர்கதையாகவே இது பற்றிய புகார் விக்ரமனிடம் கொண்டுசெல்லப்பட இப்போது இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் விக்ரமன்..

Comments are closed.