
பேஸ்புக், டிவிட்டர்களில் பெரும்பாலும் கமென்ட் அடிப்பதற்கோ, இன்னொருவரை கலாய்ப்பதற்கோ புகழ்பெற்ற பஞ்ச் வசனங்களை உபயோகப்படுத்துகிறார்கள் அல்லவா..? அதை வைத்தே ஆர்.ஜே.பாலாஜி ‘போடு போடு’ என ஒரு பாடலை ஜெய், சுரபி நடித்திருக்கும் ‘புகழ்’ படத்திற்காக எழுதியுள்ளார்.
‘வடகறி’ படத்திற்கு இசையமைத்த விவேக்-மெர்வின் என்கிற இரட்டை இசையமைபப்பாளர்கள் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளனர். வெற்றிமாறனின் உதவியாளர் மணிமாறன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசையை வெற்றிமாறன் வெளியிட்டார். வருண்மணியன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
Comments are closed.