தயாரிப்பாளர் முக்தா.வி.கோவிந்த் காலமானார்

181


ரஜினி நடித்த பொல்லாதவன், சிவப்பு சூரியன், சிவாஜி நடித்த அந்தமான்காதலி, கமல் நடித்த நாயகன், சூரியகாந்தி உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர்கள் முக்தா.வி.சீனிவாசன், முக்தா.வி.ராமசாமி அவர்கள்.

இவர்களில் முக்தா.வி.ராமசாமியின் மகனாகிய முக்தா.வி.கோவிந்த் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 53. இவர் தற்போது நவீன்சந்திரா, ரூபாமஞ்சரி நடிக்க சத்யசிவா இயக்கத்தில் உருவான ‘சிவப்பு’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.

சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த கோவிந்த், சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவரது மனைவி பிரியதர்ஷினி கோவிந்த், பிரபல கலாசேத்ரா நடன கல்லூரியின் முதல்வர் ஆவார். அவர் இத்தாலியில் இருப்பதால் அவர் வந்த பிறகு நாளை (வெள்ளி) காலை ராயப்பேட்டை மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

தற்போது திரையுலகை சேர்ந்தவர்கள் ராயப்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Comments are closed.