
ரஜினியை வைத்து தான் தயாரித்த ‘கபாலி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதுடன் நல்ல வசூலையும் தந்துகொண்டிருப்பதில் ஒரு தயாரிப்பாளராக இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் கலைப்புலி தாணு.. இந்த சந்தோசத்தை பகிர்ந்துகொள்வதற்காக நேற்று இரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்தப்படம் உருவான விதம் குறித்தும் ரஜினி கொடுத்த ஒத்துழைப்பு பற்றியும் மனம் நெகிழ்ந்து பேசினார்.
“சூப்பர்ஸ்டார் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது நான் அவரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஒரே காரணத்துக்காக ஸ்ரீ ராகவேந்திரா சாமிக்கு அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரதம் இருந்தேன். இந்த விரதம் பொய் இல்லை, இந்த விரதம் சத்தியமானது. கண்டிப்பாக அவர் மீண்டு வந்து எனக்கு ஒரு படம் நடிப்பார் என்று நான் நம்பிக்கையோடு காத்திருந்தேன். அதே போல் சூப்பர் ஸ்டார் நன்கு குணமாகி வந்தார். அதன் பின்னர் திடீரென்று என்னை அழைத்து நாம் ஒரு படம் பண்ணாலம் என்றார். நான் மகிழ்ச்சியுடன் சரி என்றேன்” என்று கூறினார் தாணு.
இந்தப்படத்தில் நடித்தபோது ரஜினி கொடுத்த ஒத்துழைப்பு தாணுவை மலைக்க வைத்துவிட்டது. “சூப்பர் ஸ்டார் அவர்களோடு பயணிக்கும் போது கிட்டத்தட்ட 24 மணி நேரம் உழைத்தார் என்ற கூற வேண்டும். காலை ஏழு மணிக்கு படபிடிப்புக்கு வந்த சூப்பர் ஸ்டார் விடியற்காலை நான்கு மணிக்கு சென்றார். அப்போது நான் அவரிடம் இப்படி உழைத்தால் உடல் நலம் என்ன ஆவது என்றேன் அதற்க்கு அவர், எல்லோரும் ஆர்வமாக உழைக்கிறார்கள் இப்படியே போகலாம் என்று கூறினார். உடல் நலம் சரி இல்லாதபோது கூட அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தது நிஜமாகவே பெரிய விஷயம்” என நெகிழ்ந்து கூறினார்.
இந்த சந்திப்பின்போது, ரஜினி, ராதிகா ஆப்தே தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
Comments are closed.