எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் ‘திருடன் போலீஸ்’

170

தான் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுபவர் தயாரிப்பாளரும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.சரண். சென்னை-28, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் என அவரது முந்தைய படங்கள் எல்லாம் ஒரு தயாரிப்பாளராக அவருக்கு நல்ல பெயரையே வாங்கித்தந்தன.

கடைசியாக அவர் தயாரித்த ‘நாணயம்’ படம் ஓடாத்தால் சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கிவிட்டார். படத்தின் பெயர் ‘திருடன் போலீஸ்’. இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதைதான் மீண்டும் சரணுக்கு உடனடியாக படம் எடுக்கும் ஆவலை தூண்டியதாம்.

‘அட்டகத்தி’ தினேஷ் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘ரம்மி’ புகழ் ஐஸ்வர்யா நடிக்க உள்ளார் இவர்களுடன் பாலசரவணன், நிதின் சத்யா, ஜான்விஜய், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.பி.பி.சரணின் நண்பன் யுவன் ஷங்கர் ராஜா தான் இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். சரணின் கேபிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா ஃபிலிம் சார்பில் ஜே.செல்வகுமார் இணைந்து தயாரிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.