ஜூன்-2ல் பிரியங்கா சோப்ராவின் ‘பே வாட்ச்’ ரிலீஸ்..!

244

priyanka chopra

தமிழன் என்கிற ஒரே தமிழ்ப்படத்தில் மட்டும் நடித்து, இங்கே அறிமுகமாகி, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான ‘பேவாட்ச் ’படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது.

‘பேவாட்ச்’ என்பது ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தழுவி அதே பெயரில் இந்த ஹாலிவுட் படம் ஒன்று தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் ட்வெய்ன் ஜான்சன், ஜாக் எஃப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேத் கோர்டன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

பாமர மக்கள் முதல் படித்த மேன்மக்கள் வரை பொழுதுபோக்கிற்கு ஏற்ற இடமாக இருப்பது கடற்கரை. அந்த கடற்கரையில் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் ‘லைஃப் கார்ட்ஸ்’. இவர்களுக்கு கடலைப் பற்றிய பல நுட்பமான விசயங்களும், அரிய விசயங்களும் தெரியும். அத்துடன் தற்போது அறிமுகமாகியுள்ள நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, எதிர்பாராமல் ஆபத்தில் சிக்கும் மக்களை எந்தவித கடினமான சூழலாக இருந்தாலும் சாகசங்கள் செய்து காப்பாற்றியும் வருகிறார்கள். இந்த யதார்த்தமான நடைமுறை தொலைகாட்சி தொடராக வெளியானபோது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ள முக்கியமான அம்சங்களை திரைக்கதையாக்கி, காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் திரைப்படமாக உருவாகியிருப்பது தான் ‘பேவாட்ச்’.

இந்த படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளும், காமெடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கமர்சியல் எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, விக்டோரியா லீட்ஸ் என்ற போதைமருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண்ணாக முக்கியமான கேரக்டரில் அற்புதமாக நடித்திருப்பதுடன், ஆக்ஷன் காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.

Comments are closed.