‘சூப்பர் போலீஸ்’ ஆக தமிழுக்கு வரும் ராம்சரண்..!

220

super-police

தெலுங்கில் ராம்சரண் நாயகனாக நடிக்க, ‘தூபான்’ என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சூப்பர் போலீஸ்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது..நாயகியாக பிரியங்காசோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல்குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள்.

காக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ராம்சரண். நிழல் உலக தாதா பிரகாஷ்ராஜின் சதியால், பொய் வழக்கில் சிக்கி, ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து, நிழல் உலக தாதாவை பழிவாங்குவதற்காக அவர் எடுக்கும் விஸ்வரூபம் தான், படத்தின் பரபரக்க வைக்கும் கதை. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

Comments are closed.