ஆக்ஷனில் இருந்து ரொமாண்டிக் ரூட்டிற்கு மாறும் பிருத்விராஜ்..!

242

போதுமடா சாமி என போலீஸ் யூனிபார்மை கழட்டிவைக்க முடிவு செய்துவிட்டார் பிருத்விராஜ். கடந்த வருடத்தில் இருந்து இந்த ஏப்ரல் வரை மூன்று படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தால் அலுப்பாக இருக்காத பின்னே..? அதனால் மீண்டும் தற்போது காதல் இளவரசனாக அவதாரம் எடுக்க முடிவு செய்துவிட்டார் பிருத்விராஜ்.

உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘என்னு நிண்ட மொய்தீன்’ என்கிற முழு நீள காதல்கதையில் நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ். கோழிக்கோட்டில் வாழ்ந்த மொய்தீன், காஞ்சனா என்கிற இருவரின் உண்மையான காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தில் பிருத்விக்கு ஜோடியாக நடிக்கிறார் ‘மரியான்’ பார்வதி.

Comments are closed.