விறுவிறு படப்பிடிப்பில் ‘மீகாமன்’..!

227

மீனவனைப்பற்றி ஒரு சில படங்கள் தமிழ்சினிமாவில் வந்துள்ளன. ஆனால் மாலுமியைப்பற்றி, அவனுடைய கடற்புர வாழ்க்கையைப் பற்றி கடந்த 20 வருடங்களில் ஒரு விரிவான படம் எதுவும் வந்ததாக பதிவு எதுவும் இல்லை. ஒரு காலத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான கப்பலிலேயே படமாக்கப்பட்ட ‘சிரஞ்சீவி’ படத்தை வேண்டுமானால் குறிப்பிடலாம்.

ஆனால் அந்தக்குறையை போக்கும் வண்ணம் தற்போது தயாராகி வருகிறது ஆர்யா நடிக்கும் ‘மீகாமன்’. ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் இந்தப்படம் கடலில் பயணிக்கும் ஒரு மரக்கலத்தின் மாலுமியைப் பற்றியது. மாலுமியாக ஆர்யா நடிக்கிறார்.

ஆக்ஷன் அட்வென்ச்சராக உருவாகும் இந்தப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதுகிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார்.

Comments are closed.